சகோதரர் தீபக் அழைத்ததாகக் கூறி ஜெயலலிதா இல்லத்துக்கு தீபா திடீர் வருகை

சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான "வேதா' இல்லத்துக்கு அவருடைய அண்ணன் மகளான தீபா ஞாயிற்றுக்கிழமை திடீரென வருகை தந்தார்.
சகோதரர் தீபக் அழைத்ததாகக் கூறி ஜெயலலிதா இல்லத்துக்கு தீபா திடீர் வருகை

சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான "வேதா' இல்லத்துக்கு அவருடைய அண்ணன் மகளான தீபா ஞாயிற்றுக்கிழமை திடீரென வருகை தந்தார். பூஜை நடத்துவதற்காக தனது சகோதரர் தீபக் அழைத்ததால் அங்கு வந்ததாக அவர் கூறினார்.

இல்லத்துக்குள் சென்ற அவர், அவருடைய சகோதரர் தீபக்குடன் இணைந்து ஜெயலலிதாவின்
புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தீபா போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்த தகவல் அறிந்து அவரது ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் அங்கு கூடினர். ஆனால் அவர்களை போயஸ் இல்ல பகுதிக்குச் செல்ல போலீஸார் அனுமதி மறுத்தனர்.
இரு தரப்பினரிடையேயும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தீபா அளித்த பேட்டி: எனது சகோதரர் தீபக் அழைத்ததால்தான் போயஸ் இல்லத்துக்கு வந்தேன். எனது அத்தை ஜெயலலிதாவின் படத்துக்கு பூ மட்டும் வைத்துவிட்டு போகுமாறு கூறினர்.
உள்ளே வளாகத்துக்குள் சென்றபோது, என்னுடன் வந்த செய்தியாளர் ஒருவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் தாக்கினர். மேலும் வீட்டிற்குள் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. அவர்கள் என்னையும் தாக்க முயன்றனர்.
அதனால், உடனடியாக வெளியே வந்துவிட்டேன். உயிர் பயத்திலேயே, எனது கணவர் மாதவனை செல்பேசியில் அழைத்து இங்கு வரவழைத்தேன். தீபக் திட்டமிட்டு ஏமாற்றி என்னை வரவழைத்துள்ளார். எனவே, தீபக் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனக்கும், எனது கணவர் மாதவனின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனவே, போலீஸார் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
மேலும் இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் கொண்டு செல்வேன். பிரதமரைச் சந்திக்க ஏற்கெனவே நேரம் கேட்டிருக்கிறேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com