இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் சட்டப் பேரவை கூட்டத் தொடர், தொழில் துறை நிறுவனங்களுக்கான நில ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. கடந்த 8-ஆம் தேதியன்று நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நில வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு எப்படி பதில்களை அளிப்பது என்பது தொடர்பான ஆலோசனைகளும் அமைச்சர்களுக்கு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com