சோனியா காந்தி பெயரில் மானிய விலை சிமெண்ட் திட்டம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

சோனியா காந்தி பெயரில் மானிய விலை சிமெண்ட் விற்கும் திட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி பெயரில் மானிய விலை சிமெண்ட் திட்டம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

சோனியா காந்தி பெயரில் மானிய விலை சிமெண்ட் விற்கும் திட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் மணல் தட்டுப்பாடு தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் பேசியதாவது:
புதுச்சேரியில் கட்டுமானப் பணிக்கு தேவையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மணல் சட்டபப்படி கொண்டு வர முடியவில்லை. கடத்துவதின் மூலம் தான் கொண்டு  வரப்படுகிறது. அண்டை மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

சிமெண்ட்டை மானிய விலையில் தர வேண்டும். தமிழகத்தில் அம்மா சிமெண்ட் தரப்படுகிறது. 3 மாதங்களாக வேலையே இல்லாததால் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பணியே இல்லை.

அமைச்சர் நமச்சிவாயம்: புதுச்சேரியில் ஆற்றுப்படுகைகளில் இருந்த மணல் வளம் குறைந்து விட்டது. மணலுக்காக அண்டை மாநிலத்தை தான் சார்ந்திருக்கிறோம். தமிழக அமைச்சருடன் பேசி மணலை புதுவை மாநிலத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர் கந்தசாமி: சிமெண்ட் உற்பத்தியாளர்களிடம் கலந்து பேசி, தரமான சிமெண்ட் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யப்படும். காங்கிரஸ் தலைவர் பேரில் மானிய சிமெண்ட் திட்டம் செயல்படு்தப்படும். சோனியா காந்தி பெயரிலேயே சிமெண்ட் திட்டம் வழங்கப்படும்.

முதல்வர்: மணல் தட்டுப்பாடு பெரியளவில் உள்ளது கட்டுமானப் பணிகள் தேங்கி உள்ளன. அரசுப் பணிகளும் நின்று விட்டன. இதுதொடர்பாக அமைச்சர்களுடன் பேசி உள்ளேன். தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் மணல் தட்டுப்பாடு பிரச்னை தொடர்பாக கோரிக்கை எழுப்பினேன். புதுச்சேரிக்கு மணல் தருவதாக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் வாக்குறுதி அளித்தார். புதுவையில் சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது புதுவையில் சிமெண்ட விநியோகம் செய்வோரை அழைத்து பேசுவோம். சோனியா காந்தி பெயரிலேயே மானிய சிமெண்ட் விற்கும் திட்டம் கொண்டு வரப்படும். தமிழக அரசுக்கு மணல் தொடர்பாக கடிதம் எழுதப்படும்.

பாஸ்கர்: மணல் கொண்டு வர கடலூர் வரை தான் பர்மிட் கொண்டு வரப்படுகிறது. புதுச்சேரி போலீஸார் தான் அதிகளவில் மணல் லாரிகளை பிடித்து வருகின்றனர். 

இப்பிரச்னை தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தி உள்ளார் தமிழகத்தில் இருந்து ஏதாவது ஒரு வகையில் வரும் மணல் தடுக்கக்கூடாது
அமைச்சர் நமச்சிவாயம்: எம்சேண்ட் என்ற செயற்கை மணலை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும்.

அசோக் ஆனந்து: எம்சேண்ட் என்ற மணலை பயன்படுத்தினால் மணல் பிரச்னை ஏற்படாது. டூப்ளிகேட் சிமெண்ட் விற்பனையை தடுக்க வேண்டும்.
கொறடா: தமிழகத்தில் மணல் குவாரியை புதுவை அரசு குத்தகை எடுக்குமா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com