மேட்டூர் அணையில் 41,375 கன மீட்டர் வண்டல் மண் தூர் வாரப்பட்டது

மேட்டூர் அணையில் 41,375 கன மீட்டர் வண்டல் மண் தூர் வாரப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் 41,375 கன மீட்டர் வண்டல் மண் தூர் வாரப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை கட்டப்பட்டு 84 ஆண்டுகள் ஆகின்றன. 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. அணையில் 93.45 டி.எம்.சி. தண்ணீரை தேக்க முடியும். மழை, வெள்ளம் காரணமாக 20 சதவீத அளவுக்கு வண்டல் படிந்திருந்தது. இதனால் முழு அளவில் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. இதனால், அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை தூர்வாரி, முழு கொள்ளளவில் தண்ணீரை சேமிக்க தமிழக அரசு திட்டமிட்டது.
இந்தப் பணிகளை மே 28-ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூலக்காடு பகுதியில் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, பண்ணவாடி, மூலக்காடு, காவேரிபுரம், கூணாண்டியூர், புதுவேலமங்கலம் பகுதிகளில் வண்டல் மண் அள்ளும் பணி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை வரை 1,098 விவசாயிகள் 41,375 கன மீட்டர் மண் அள்ளிச் சென்று பயனடைந்துள்ளனர் என மேட்டூர் சார்-ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம்: இந்த நிலையில், அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 23.34 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 211 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 5.12 டி.எம்.சி. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com