சென்டாக் விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் மாணவர்களுக்கு நல்ல தீர்வு; ஆளுநர் கிரண்பேடி நம்பிக்கை

சென்டாக் மருத்துவ பட்டமேற்படிப்பு விவகாரத்தில் மாணவர்களுக்கு உயர்நீதிமன்றத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என ஆளுநர் கிரண்பேடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்டாக் மருத்துவ பட்டமேற்படிப்பு விவகாரத்தில் மாணவர்களுக்கு உயர்நீதிமன்றத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என ஆளுநர் கிரண்பேடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ரயில் நிலையத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான சிறப்பு அறிவியல் ரயில் கண்காட்சியைத் தொடங்கி வைத்த பின் அவர் இன்று  செய்தியாளர்களிடம் கூறியது:
சென்டாக் மருத்துவ பட்டமேற்படிப்பு பாடப்பிரிவுகளில் மாணவர்கள் அனைவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமாகும். குறிப்பாக கட்டண நிர்ணயம் தொடர்பான பிரச்னைக்கு முடிவு வரும் வகையில் மாணவர்கள் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆளுநர் தனிச் செயலர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வு நல்ல தீர்ப்பை வழங்கும். இதனால் மாணவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

காலநிலை பருவ செயல்திட்டம் தொடர்பான சிறப்பு அறிவியல் ரயில் மிகவும் பயனுள்ளதாகும். இதை செயல்படுத்தி வரும் அனைத்து அமைப்புகளையும் பாராட்டுகிறேன். தொடர்ந்து நாடு முழுவதும் இச்சிறப்பு ரயில் சென்று வர வேண்டும். இதன் மூலம் மாணவ, மாணவியர் அனைவரும் சுற்றுச்சூழல் பாதகாப்பு குறித்த விழிப்புணர்வை பெறுவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com