தொடர் விடுமுறைகளுக்கு பதில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க கல்வித்துறை உத்தரவு

புதுவையில் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டதால் அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

புதுவையில் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டதால் அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்துக்கு மாறாக கடுமையாக இருந்ததால் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொது தேர்வுகள் முடிந்த நிலையில் மற்ற வகுப்புகளுக்கும் தேர்வு நடத்தி 10 நாட்கள் முன்னதாகவே விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தால் பள்ளிகள் ஜூன் 7ம்தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்தார். தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 7-ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. 

ஆனால் புதுவையில் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. 12-ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கடந்த 12ம் தேதி திறக்கப்பட்டு அன்றைய தினமே மாணவர்களுக்கு பாடபுத்தகம், சீருடை வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக 11 நாட்கள் விடுமுறை அதிகமாக விடப்பட்டுள்ளது. அதிக விடுமுறையின் எதிரொலியாக, அந்த நாட்களை சரி செய்யும் வகையில் புதுவை பள்ளி கல்வித்துறை அடுத்து வரும் 7 சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜூ வெளியிட்டுள்ள பட்டியல்படி, வரும் 24-ம் தேதி அன்று வியாழக்கிழமை பாடத்திட்டமும், ஜூலை 1-ம் தேதி வெள்ளிக்கிழமை பாடத்திட்டமும், 15-ம் தேதி திங்கள் கிழமை பாடத்திட்டமும், 29ம் தேதி செவ்வாய் கிழமை பாடத்திட்டமும், ஆகஸ்டு 12-ம் தேதி புதன் கிழமை பாடத்திட்டமும், செப்டம்பர் 9-ம் தேதி வியாழக்கிழமை பாடத்திட்டமும், 16-ம் தேதி வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தின் படி பள்ளிகள் இயங்கும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com