தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னைக்கு மழை வாய்ப்பு எப்போது?

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளது, சென்னையில் எப்போது மழை பெய்யும் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னைக்கு மழை வாய்ப்பு எப்போது?

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளது, சென்னையில் எப்போது மழை பெய்யும் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தென்மேற்குப் பருவ மழை தொடங்கிய ஒரு சில நாட்களுக்கு கேரளாவில் மழை தீவிரம் அடைந்தாலும், தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. அதே சமயம், கேரளாவிலும் தற்போது மழையின் அளவு குறைந்துவிட்டது.

வழக்கமாக தென்மேற்குப் பருவ மழையால் தமிழகத்துக்கு பெரிய அளவில் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்காது என்றாலும், ஓரளவுக்கு வெப்பம் தணியும்.

ஆனால், இந்த ஆண்டு தமிழகத்தில் ஒரு சில இடங்களைத் தவிர பரவலாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில், இன்று முதல் நாளை காலை வரை தமிழகத்தில் எந்தெந்த ஊர்களில் மழை பெய்யும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

அதில், 
தெற்கு தமிழ்நாடு
புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் தொடர்ந்து 3வது நாளாக இன்று இரவும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

ராமநாதபுரத்தின் சில பகுதிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் இன்று மழை பெய்யும். திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், மதுரை மாவட்டத்தில் சிவகங்கையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.

டெல்டா பகுதிகள்

தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், மற்றும் பிற டெல்டா பகுதிகளுக்கும் இன்று மழை உண்டு.

வட தமிழகம்
ஆச்சரியப்படும் வகையில் மீண்டும் கடலூர், சிதம்பரம் பகுதிகளிலும் மழைக்கான வய்ப்புகள் காணப்படுகின்றன.

கடந்த இரண்டு நாட்களாக ஆழ்ந்த மேகக் கூட்டங்கள் புலிகாட் பகுதியை நோக்கி நகர்ந்தன. திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரியை சுற்றியுள்ள பகுதிகளும் சிறப்பாகக் காணப்படுகிறது. ஆனால் தொடர்ந்து கண்காணித்தால்தான் உறுதியாக சொல்ல முடியும்.

சரி இறுதியாக நாம் அனைவரின் கேள்வியாக இருக்கும் சென்னைக்கு வருகிறார்.

சென்னை
சென்னையில் மழைக்கான வாய்ப்பு உறுதி என்ற நிலை வரும் வரை நான் எதுவும் சொல்வதற்கில்லை. இன்று சென்னையின் வானிலை எப்படியும் இருக்கலாம். ஆனால், சென்னையில் ஜூன் 19ம் தேதி நிச்சயம் மழை பெய்யும். ஜூன் 6ம் தேதி சென்னையில் பரவலாக பெய்த மழையைப் போல 19ம் தேதியும் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com