கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு அனுமதி: அமைச்சர் தகவல்

கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை, மாணவர் வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள அனுமதியளிக்கப்படும்
கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு அனுமதி: அமைச்சர் தகவல்

கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை, மாணவர் வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள அனுமதியளிக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு வியாழக்கிழமை பதிலளித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது:
கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்களிடையே வரவேற்பு அதிகரித்திருக்கிறது. எனவே, கலை, அறிவியல் கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ள அரசு அனுமதிக்கவேண்டும் என சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, தேவையின் அடிப்படையில் அரசுக் கல்லூரிகளில் 20 சதவீதம் அளவுக்கும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15 சதவீதம் அளவுக்கும், சுயநிதிக் கல்லூரிகளில் 10 சதவீதம் அளவுக்கும் இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து வருகிறது.
இந்த ஆண்டும் தேவை மற்றும் வரவேற்புக்கு ஏற்ப இடங்களின் எண்ணிக்கை உயர்த்தித் தரப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com