ஜியோ பாணியில் 3 மாதங்களுக்கு இலவச டேட்டா: களத்தில் குதித்தது பிஎஸ்என்எல்

பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்காக 'எஸ்டிவி 444' எனும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
ஜியோ பாணியில் 3 மாதங்களுக்கு இலவச டேட்டா: களத்தில் குதித்தது பிஎஸ்என்எல்

சென்னை: பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்காக 'எஸ்டிவி 444' எனும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில், 3 மாதங்களுக்கு இலவச டேட்டா வசதியை வழங்கி பிரிபெய்டு திட்டத்துக்கான ரீசார்ஜ் வசதியை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது.

சௌகா என்ற இந்த திட்டத்தில் ரூ.444 செலுத்தி அன்லிமிடட் 4ஜி டேட்டாவை 3 மாதங்களுக்குப் பெறலாம். 

அதிக தகவல்களை வாடிக்கையாளர் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்கள் நாள்தோறும் 4 ஜிபி அளவுக்கு தகவல்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்துக்கு 3 மாதங்கள் வரை வேலிடிட்டி. எனவே, வாடிக்கையாளர் அதிக தகவல்கள் குறைந்த கட்டணத்தில் பெற்று பயன்பெறலாம் என பிஎஸ்என்எல் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய எஸ்டிவி 333 என்ற திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது எஸ்டிவி 444 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com