ரூம் போட்டு யோசிப்பாங்களோ: நூதன முறையில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை ஏமாற்றிய ஊழியர்கள்

விலையுயர்ந்த ஸ்மார்ட் போன்களை திருடிவிட்டு, அதில் வெறும் உப்புப் பாக்கெட், செங்கல் போன்றவற்றை வைத்து ஏமாற்றிய இரண்டு ஃபிளிப்கார்ட் ஊழியர்கள் தேடப்பட்டு வருகிறார்கள்.
ரூம் போட்டு யோசிப்பாங்களோ: நூதன முறையில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை ஏமாற்றிய ஊழியர்கள்


சென்னை: விலையுயர்ந்த ஸ்மார்ட் போன்களை திருடிவிட்டு, அதில் வெறும் உப்புப் பாக்கெட், செங்கல் போன்றவற்றை வைத்து ஏமாற்றிய இரண்டு ஃபிளிப்கார்ட் ஊழியர்கள் தேடப்பட்டு வருகிறார்கள்.

இணையதளத்தில் பெரிய அளவில் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது ஃபிளிப்கார்ட் நிறுவனம். பெங்களூருவில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் சென்னை கிளை சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில், சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஃபிளிப்கார்ட் டெலிவரி ஊழியர்கள் ஜெய்கணேஷ், சாம் திவாகர், போலியான பெயர்களில் ஃபிளிப்கார்டில் விலை உயர்ந்த செல்போன்களை ஆர்டர் செய்துள்ளனர்.

அந்த செல்போன்கள் அலுவலகத்துக்கு வந்ததும், அதனை டெலிவரி செய்ய எடுத்துச் சென்று, அதனை பிரித்து அதில் இருந்த செல்போனை எடுத்துவிட்டு அதில் கல் உப்பு, செங்கல், பழைய செல்போன்கள் என ஏதேனும் ஒன்றை வைத்து, பிரிக்கப்படாதது போலவே மீண்டும் பேக் செய்துவிடுவார்கள்.

பின்னர், சம்பந்தப்பட்ட முகவரியில் ஆட்கள் இல்லை, வாடிக்கையாளர் செல்போனை வாங்க மறுத்துவிட்டார், முகவரி தவறாக உள்ளது என்று பல காரணங்களை சொல்லி ஃபிளிப்கார்ட் நிறுவனத்திடம் பார்சல்களை திருப்பி அனுப்பி விடுவார்கள்.

இவ்வாறு திருடும் செல்போன்களை வேறு நபர்களுக்கு விற்றுவிடுவார்கள். இதுபோல சுமார் 6 செல்போன்களை அவர்கள் திருடியிருப்பதும், அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நிறுவனத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் மீது ஃபிளிப்கார்ட் நிறுவனம் புகார் அளித்ததை அறிந்த, இருவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com