சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி மீண்டும் தொடக்கம்

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி மீண்டும் தொடக்கம்

சென்னை: சென்னை தி.நகரில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணியின் போது ஊழியர் ஒருவர் உயிரிழந்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இடிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் இடிப்புப் பணிகள் தொடர்ந்து 9- ஆவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, ஜா கட்டர் இயந்திரம் விழுந்ததில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதனால், இடிப்புப் பணிகள் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டன. எந்தப் பணியும் நடக்காததால் ஏற்கெனவே இடிக்கப்பட்ட கட்டடக்கழிவுகள் அப்பகுதியில் 30 அடிக்கு மேலாக தேக்கமடைந்தது.

இடிப்புப் பணியின்போது ஊழியர் ஒருவர் உயிரிழந்ததால், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

உயிரிழந்த ஊழியருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசுக் குழு மாலையில் ஆய்வு மேற்கொண்டது.

இடிக்கும் பணிகள் குறித்து சென்னை சில்க்ஸ் நிர்வாகம், இடிப்புப் பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தியது.

திங்கள்கிழமை முதல் மீண்டும் பணிகள் தொடங்கப்படும். தற்போது தேங்கியுள்ள கட்டடக் கழிவுகள் ஓரிரு நாள்களில் அகற்றப்பட்டு, மீதமுள்ள கட்டடம் முழுவதும் இடிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி இன்று மீண்டும் துவங்கி உள்ளது. இடிப்பு பணிகள் இன்று நிறைவு கட்டத்தை எட்டும் என்றும், சுமார் 15 நாட்களாக அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து நாளை முதல் துவங்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com