10 நிமிடங்களில் முடிந்த தீபாவளி முன்பதிவு: காத்திருந்த பயணிகள் ஏமாற்றம்

தீபாவளி முன்பதிவுக்காக ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காத்திருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
10 நிமிடங்களில் முடிந்த தீபாவளி முன்பதிவு: காத்திருந்த பயணிகள் ஏமாற்றம்

தீபாவளி முன்பதிவுக்காக ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காத்திருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி அக்டோபர் 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அக்டோபர் 16 ஆம் தேதிக்கான ரயில் முன்பதிவு நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

காலை 8 மணிக்கு தொடங்கும் முன்பதிவுக்காக திருநெல்வேலி ரயில் நிலையத்தில் அதிகாலை 3 மணியில் இருந்தே ஏராளமானோர் காத்திருந்தனர்.

முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் கன்னியாகுமரி விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவற்றின் முன்பதிவு டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.

இதுகுறித்து சுரண்டையைச் சேர்ந்த தனசேகர் என்பவர் கூறுகையில், எனது மகள் குடும்பத்துடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். அவர் தீபாவளிக்கு ஊருக்கு வருவதற்காக முன்பதிவு செய்ய நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் காத்திருந்தேன்.

முன்பதிவு தொடங்கிய 13 ஆவது நிமிடத்தில் காத்திருப்போர் பட்டியல் 150-க்கும் மேல் மூன்று விரைவு ரயில்களிலும் சென்று விட்டது. இதனால் வேறுவழியின்றி நாளை மற்றும் நாளை மறுநாளாவது காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் நிலை உருவாகியுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தென்மாவட்ட ரயில்கள் பண்டிகை காலங்களில் நிரம்பி வழிவது தொடர்கதையாகி வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com