ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையின் பாதுகாப்பை மேம்படுத்துங்கள்: வங்கிகளுக்கு காவல் ஆணையர் அறிவுரை

ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையின் பாதுகாப்பை வங்கிகள் மேம்படுத்த வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் தெரிவித்தார்.
ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையின் பாதுகாப்பை மேம்படுத்த காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற வங்கி அதிகாரிகள்.
ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையின் பாதுகாப்பை மேம்படுத்த காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற வங்கி அதிகாரிகள்.

ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையின் பாதுகாப்பை வங்கிகள் மேம்படுத்த வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் தெரிவித்தார்.
ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் பெருகி வரும் மோசடியைக் கட்டுப்படுத்துவது குறித்தும், ஏ.டி.எம். கார்டுகளை மையமாக வைத்து நடைபெறும் பண மோசடியைக் கட்டுப்படுத்துவது குறித்தும் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்து சென்னை காவல் ஆணையர் விசுவநாதன் பேசியது:
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் மன்றத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களில், 80 சதவீத புகார்கள் ஆன்லைன் பணமோசடி தொடர்பானதாக இருக்கிறது.
இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகவே காணப்படுகிறது. இதைப் பயன்படுத்தி மோசடி கும்பல், பொதுமக்களிடம் பணத்தை பறிக்கிறது. ஏழை மக்கள், தங்களது வாழ்க்கையின் ஒட்டு மொத்த சேமிப்பையும் அபகரிக்கும் வகையில் நடைபெறும் இப்படிப்பட்ட மோசடிகளை அனுமதிக்க முடியாது.
இம்மோசடியில் ஈடுபடுகிறவர்களைக் கண்டறிந்து கைது செய்து சிரமமாக உள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே இம்மோசடியை முற்றிலுமாகத் தடுக்க முடியும். இப்பிரச்னையில்,மோசடி நடைபெறாமல் தடுக்கும் வகையில் வங்கிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடி நடைபெறாமல் இருப்பதற்குரிய பாதுகாப்பு வழிமுறைகளை வங்கிகள் ஆராய வேண்டும்.
மோசடி நடைபெறாமல் இருக்க, அவ்வப்போது வங்கிகள் தங்களது தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் பணத்துக்கு உறுதியான பாதுகாப்பை அளித்தால்தான், வங்கிகள் வணிகத்தைப் பெருக்க முடியும் என்றார்.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் எம்.டி.கணேசமூர்த்தி, துணை ஆணையர்கள் ஆர்.லலிதா லட்சுமி, எஸ்.ஆர்.செந்தில்குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொதுமேலாளர்கள் எம்.எம்.சாரங்கி, வைரம் சோமசுந்தரம், இந்தியன் வங்கி பொதுமேலாளர் மணிமாறன் உள்பட 100-க்கும் மேற்பட்ட வங்கி உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com