சட்டப்பேரவையில் முதல் முறையாக ஆளுங்கட்சி எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளும்கட்சி எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்தார்.
சட்டப்பேரவையில் முதல் முறையாக ஆளுங்கட்சி எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு


சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுங்கட்சி எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்தார்.

சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவர், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை தொடர்பாக துணைக் கேள்வி கேட்க முயன்றார் அதிமுக அம்மா கட்சி எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, ஆண்டிப்பட்டி தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்காததைக் கண்டித்தும், சுகாதாரத் துறை கேள்விக்கு அனுமதி மறுக்கப்பட்டதாலும் பேரவையில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்தார்.

வெளிநடப்பு செய்த தங்க தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com