தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டது! 

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் 18 நாட்களுக்கு பின்னர் இன்று முழுமையாக இடிக்கப்பட்டது
தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டது! 

சென்னை: தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் 18 நாட்களுக்கு பின்னர் இன்று முழுமையாக இடிக்கப்பட்டது

சென்னையின் முக்கிய வணிக கேந்திரமான தியாகராய நகரில் அமைந்துள்ளது சென்னை சில்க்ஸ் துணிக்கடை.இத்துடன் குமரன் ஜூவல்லர்ஸ் என்னும் நகைக்கடையும் தரைத்தளத்தில் அமைந்துள்ளது.   

இங்கு கடந்த 31-ஆம் தேதி அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினரின் கடுமையான முயற்சிகளுக்கு பின்னரும் மூன்று நாட்களாக தீயை அணைக்க இயலவில்லை.இந்த தீ விபத்தில் அந்த கட்டடம் முழுமையாக சேதம் அடைந்தது.

பின்னர் சேதமான கட்டடத்தை இடிக்கும் பணி கடந்த 3-ஆம் தேதியன்று தொடங்கியது. முதலில் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடித்து விடலாமென்று எண்ணித் துவக்கப்பட்ட பணிகள், பல்வேறு தாமதங்களின்  காரணமாக, இத்தனை நாட்களாக நீடித்தது. அத்துடன் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலம் இதன் காரணமாக சேதம் அடையாமல் தவிர்ப்பதும் முக்கியமாக கருதப்பட்டது.

இடையில் இடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஜா கட்டர் எண்ணும் கருவி விழுந்து ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் ஒரு வழியாக கட்டடத்தினை இடிக்கும் பணியானது இன்று முழுமையாக நிறைவடைந்தது. கட்டட அடைப்புகளை அகற்றும் பணி நாளை முதல் துவங்கும் என்றும், மூன்று நாட்களுக்குள் அந்த பணியும் முழுமையாக நிறைவடையும் என்றும் ஒப்பந்ததாரர் பீர் முகமது தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com