'அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்கள்'

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நூலகங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நூலகங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது தென்காசி பேரவை உறுப்பினர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எழுப்பிய கேள்வியை ஒட்டி, திமுக உறுப்பினர் சக்கரபாணி துணைக் கேள்வியை எழுப்பினார்.
அப்போது பேசிய அவர், அண்ணா நூற்றாண்டு நூலகப் பராமரிப்புக்கு ரூ.5 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதேபோன்று, திமுக ஆட்சிக் காலத்தில் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நூலகங்கள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளன. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: இது குறித்து ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com