அரசியலுக்கு ரஜினி வருவார்: இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்துக்கு வருவார் என அவரை சென்னையில் திங்கள்கிழமை சந்தித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
அரசியலுக்கு ரஜினி வருவார்: இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்துக்கு வருவார் என அவரை சென்னையில் திங்கள்கிழமை சந்தித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது அரசியல் குறித்து அவர் கூறிய கருத்துகளால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினியின் அரசியல் கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது புதிய படமான காலா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் திங்கள்கிழமை (ஜூன் 19) சந்தித்தார். அப்போது ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பு 20 நிமிஷங்கள் நடைபெற்றது. அர்ஜுன் சம்பத்துடன் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் இராம.ரவிக்குமார், இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் ரஜினியைச் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறுகையில், அரசியலுக்கு வரவேண்டும் என்று ரஜினியிடம் கோரிக்கை வைத்தோம். இது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகளை ரஜினி செய்து வருகிறார்.
நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினியின் எண்ணம். ரஜினி சிங்கம் போன்று தனியாக அரசியலுக்கு வருவார். அவரது தலைமையில் கூட்டணி அமைத்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அவரை பாஜக இயக்கவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com