உணவு வணிகர்களுக்கு பாதுகாப்புத்தர வேண்டுகோள்

உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான வணிகர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்புத் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் தமிழ்நாடு

உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான வணிகர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்புத் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா மனு அளித்துள்ளார்.
மனு விவரம்: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள், உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான வணிகர்களைப் பாதிக்கும் என்பதால் இந்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்த முடியாத சட்ட விதிகளையும், ஒழுங்குமுறைகளையும் மாற்றி அமைக்க வேண்டும் என கடந்த ஆறு ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளிடம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை எந்தவிதமான சட்டத் திருத்தங்களும் செய்யப்படவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளால் வணிகர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர். பதிவு மற்றும் உரிமம் எடுக்காவிட்டால் ரூ.5 லட்சம், 6 மாத சிறை தண்டனை என மாவட்ட ஆட்சியர் மூலமாக அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. ரூ.24 லட்சம் வரை வணிகம் செய்யும் சிறு, நடுத்தர வணிகர்களுக்கு ரூ.100 மட்டும் செலுத்தி பதிவு செய்தால் போதும் அறிவிக்கப்பட்டது. ஆனால் உரிய அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. சிறிய, நடுத்தர வணிகர்களின் கடைகளில் மாதிரி எடுக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான வணிகர்களுக்கு தமிழக அரசு பாதுகாப்புத் தர வேண்டும். ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளிடம் கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டும். இம்மனு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com