காவிரி போராட்டத்தை திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

காவிரி போராட்டத்தை திசை திருப்பும் முயற்சிகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என அனைத்திந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி போராட்டத்தை திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

காவிரி போராட்டத்தை திசை திருப்பும் முயற்சிகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என அனைத்திந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பி.ஆர்.பாண்டியன் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆறு ஆண்டு காலமாக குறுவை சாகுபடியையும், கடந்த ஆண்டு முதல் சம்பா சாகுபடியையும் இழந்து விட்டோம்.
இந்த ஆண்டு தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் கடும் சரிவு போன்ற காரணங்களால் தமிழகத்தை விட்டு சுமார் 5 லட்சம் விவசாயிகள் வெளியேறி விட்டனர். அதனால் சூழ்நிலையில் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தையும், தமிழக வேளாண்மையையும் பாதுகாப்பதற்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் காவிரி நீர் தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டங்களை திசை திருப்பும் வகையிலான நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது.
காவிரிப் போராட்டங்களை திரைப்படத் துறையினர் தவிர்த்து வருகின்றனர். காவிரி என்ற வார்த்தையைக் கூட நடிகர் ரஜினிகாந்த் உச்சரிப்பதில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைச் சந்திக்காத பிரதமர் மோடி நடிகர் ரஜினிகாந்தைச் சந்திக்கிறார். அந்தத் தகுதியை ரஜினிக்கு வழங்கியது தமிழ்மக்கள்தான். அந்த மக்களின் நலனை கருத்தில் கொண்டு பிரதமரை ரஜினி சந்தித்து தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறிய காவிரி நீரைப் பெற்றுத்தர வலியுறுத்தியிருக்க வேண்டும்.
காவிரி பிரச்னையில் விவசாயிகளை ஆதரிக்காத ரஜினிகாந்தை நதிநீர் இணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) சந்தித்து நதிநீர் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாயைக் கேட்டிருப்பது விவசாயிகளை அவமதிக்கும் செயலாகும். போராட்டத்தை திசை திருப்பும் முயற்சிகளில் அய்யாக்கண்ணு ஈடுபடுவது கண்டிக்கத்கது. அவர் போன்ற தலைவர்கள் விளம்பர நோக்கத்துக்காக இல்லாமல் விவசாயிகளின் நோக்கத்துக்காக பாடுபட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com