கூடலூர் பகுதியில் நடமாடும் காட்டு யானைகள்: அச்சத்தில் பொதுமக்கள்

கூடலூரில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து காட்டு யானைகள் தொடர்ந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  
கூடலூர் பகுதியில் நடமாடும் காட்டு யானைகள்: அச்சத்தில் பொதுமக்கள்

கூடலூரில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து காட்டு யானைகள் தொடர்ந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  

கூடலூர் பகுதியில் சமீபகாலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவை குடியிருப்பு மற்றும் விளை நிலங்களில் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், கூடலூரை அடுத்துள்ள கீழ் நாடுகாணி அண்ணா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு குட்டியுடன் நுழைந்த யானை, அப்பகுதியிலுள்ள விவசாயப் பயிர்களை அழித்து சேதப்படுத்தியது.

இதேபோல், கூடலூர் அள்ளூர் வயல் பகுதியில் நுழைந்த யானைகள், அப்பகுதியிலுள்ள விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின.

கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் தினமும் இரவு நேரத்தில் ஒற்றை யானை உலா வருகிறது. தலைமை அஞ்சல் நிலையம் வழியாக ராஜகோபாலபுரம் பகுதிக்குள் நுழையும் இந்த யானை, பிள்ளையார் கோயில் வீதி, ஆதம்ஷா நகர் வழியாக சென்று வீடுகளிலுள்ள வாழை, பலா மரங்களை சேதப்படுத்தி பழங்களை தின்று செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனால் நகரிலுள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அண்ணா நகர் பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் யானைகள் நடமாட்டத்தை மக்களால் கண்டறிய முடிவதில்லை.

எனவே, அந்தப் பகுதியில் தெருவிளக்குகளை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com