கூவத்தூர் விவகாரம் தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: டிடிவி.தினகரன்

தம் மீது குற்றம் இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு குதிரைபேரம் தொடர்பான எந்தவொரு விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் என அதிமுக
கூவத்தூர் விவகாரம் தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: டிடிவி.தினகரன்

சென்னை: தம் மீது குற்றம் இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு குதிரைபேரம் தொடர்பான எந்தவொரு விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் என அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாதான் முடிவு செய்ய வேண்டுமெனத் தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து இது தொடர்பாக   ஆளுநர் விடுத்துள்ள உத்தரவு குறித்து கேள்விக்கு பதில் அளிக்கையில், தங்களுக்கு மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை எனத் தெரிவித்தார்.  

தொடர்ந்து அவர் கூறுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக, சிபிஐ விசாரணை மட்டுமின்றி, பன்னாட்டு காவல்துறையான, இன்டர்போல் விசாரணைக்கும் தயார் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com