கொளத்தூரில் வண்ண மீன் வளர்ப்புத் திட்டம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

தனது தொகுதியான கொளத்தூரில் வண்ண மீன் பூங்கா திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
கொளத்தூரில் வண்ண மீன் வளர்ப்புத் திட்டம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

தனது தொகுதியான கொளத்தூரில் வண்ண மீன் பூங்கா திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது கொளத்தூரில் வண்ண மீன் பூங்கா திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:
மு.க.ஸ்டாலின்: வண்ணமீன் வானவில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க பேரவை விதி 110-ன் கீழ் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். திட்டம் அறிவித்து 30 மாதங்கள் கடந்துள்ளது. கொளத்தூரில் 200-க்கும் மேற்பட்டோர் வண்ணமீன் விற்பனை தொழிலில் 150-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். அங்கு நிலத்தடி நீரின் தன்மை வண்ண மீன்கள் வளர்வதற்கான சூழல் உள்ளது. எனவே, கொளத்தூரில் வண்ணமீன் ஆராய்ச்சி மையம் அமைத்திட வேண்டும்.
நிதி-மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்: தமிழகத்தில் வண்ணமீன் வானவில் தொழில்நுட்பப் பூங்கா அமைத்திட உத்தரவிடப்பட்டு, அது முதல்வரால் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது. வண்ணமீன் விற்பனைத் தொழிலில் கேரளம் முன்னிலை வகிக்கிறது.
இந்த வண்ணமீன் தொழில்நுட்பப் பூங்கா திறக்கப்படும் போது தமிழகம் முதலிடம் பெறும். 100 சதுர அடி நிலம் இருந்தாலே மாதம் ரூ.10,000 சம்பாதிக்கும் வகையில் வண்ணமீன் வளர்ப்புத் தொழில் லாபகரமாக உள்ளது.
எனவே, இதுபோன்ற சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு அரசு தேவையான உதவிகளைச் செய்கிறது. வண்ணமீன் பூங்கா மாதவரத்தில் அமைக்கப்படும். கொளத்தூரில் போதிய நிலங்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com