தங்கம் பவுனுக்கு ரூ.40 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.22,056-க்கு விற்பனையானது.

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.22,056-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் ஏற்ற இறக்கம் ஆகிய தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5 குறைந்து, ரூ. 2,757-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில், வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயர்ந்து, 41 ரூபாய் 50 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.41,500 ஆகவும் இருந்தது.
திங்கள்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
1 கிராம் தங்கம் 2,757
1 பவுன் தங்கம் 22,056
1 கிராம் வெள்ளி 41.50
1 கிலோ வெள்ளி 41,500

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com