புதிதாக 7 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்

தமிழகத்தில் புதிதாக ஏழு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

தமிழகத்தில் புதிதாக ஏழு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், அவர் திங்கள்கிழமை வெளியிட்ட புதிய அறிவிப்புகள்: 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், நூலகங்கள், கழிவறைகள், ஆசிரியர் ஓய்வறைகள், மாநாட்டு அறைகள், கூட்டரங்குகள், கூடுதல் அறைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.210 கோடி செலவில் இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும்.
இவை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடங்கள் என்ற பெயரில் அழைக்கப்படும். இதற்கென முதல் கட்டமாக இந்த ஆண்டு ரூ.105 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி பெறுவதற்கு வழிசெய்திடும் வகையில், பல்வேறு மாவட்டங்களில் ஏழு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நிகழ் கல்வியாண்டில் தொடங்கப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டில் இருந்து 268 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்தப் பாடப் பிரிவுகளைக் கையாள 600 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com