உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பிச்சாண்டி செவ்வாய்க்கிழமை பேசியது: உள்ளாட்சித் தேர்தலை இன்னும் நடத்தாமல் உள்ளீர்கள். ஜனநாயகத்தின் மீது அதிமுக அரசுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே இது காட்டுகிறது என்றார்.
அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறுக்கிட்டுக் கூறியது: உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு திமுக சென்றதால்தான் தேர்தல் நிறுத்தப்பட்டது என்றார்.
மு.க.ஸ்டாலின் (எதிர்க்கட்சித் தலைவர்): அமைச்சர் சரியான விளக்கம் அளிக்கவில்லை. தேர்தலை நிறுத்துவதற்காகவே நீதிமன்றத்துக்கு திமுக சென்றதைப் போல சொல்கிறார். இடஒதுக்கீடு முறையைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்றுதான் நீதிமன்றம் சென்றோம். அதிமுக அரசு செய்தது தவறு என்றுதான் நீதிமன்றமே தேர்தலை நிறுத்தியுள்ளது.
எஸ்.பி.வேலுமணி: தவறு செய்ததாகக் கூறி நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்யவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அறிவித்துத்தான் தேர்தலை நடத்த உள்ளோம். இப்போதுகூட உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயாராக இருக்கிறோம்.
மு.க.ஸ்டாலின்: 50 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்கப் போவதாக அமைச்சர் கூறினார். உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு முதலில் 33 சதவீத இடஒதுக்கீடு அளித்தது திமுகதான் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com