ராம்நாத் கோவிந்துக்கு ஓபிஎஸ் அணி ஆதரவு!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள்
ராம்நாத் கோவிந்துக்கு ஓபிஎஸ் அணி ஆதரவு!

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜனதாக தேசிய தலைவர் தலைவர் அமித்ஷா ஆதரவு கேட்டதற்கு இணங்க பாஜக ஆதரவு குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக இன்றைய ஆலோசனை கூட்டத்தின் மூலம் ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம். தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் அவருக்கு எங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் 12 எம்எல்ஏக்களும், 12 மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக அம்மா அணியின் சார்பில் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், சில எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பின்னர், பிரதமரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தை ஒருமனதாக ஆதரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் அணிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com