நாளை முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 23) முதல் விண்ணப்பம் விநியோகம் தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 23) முதல் விண்ணப்பம் விநியோகம் தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவப் படிப்புகளுக்கான "நீட்' பொது நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் மே 7-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சுமார் 88 ஆயிரம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் ஜூலை 26-ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்துக்கு "நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை இதுவரை மத்திய அரசு பெறவில்லை. அதேவேளையில், "நீட்' தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் "நீட்' தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், "நீட்' தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே, விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து தமிழகத்திலும் விண்ணப்ப விநியோகம் தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியது: "நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் கிராமப்புற மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
இதையடுத்து, விண்ணப்பங்களை ஜூன் 23-ஆம் தேதி முதல் விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும். இணையதளம், நேரடி விநியோகம் என இரு முறைகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com