அ.தி.மு.க அணிகளின் இணைப்பு தொடர்பாக தில்லிக்கு வரவில்லை: ஓ.பி.எஸ் பேட்டி! 

அ.தி.மு.க வில் உள்ள அணிகளின் இணைப்பு நோக்கத்திற்காக தான் தில்லி வரவில்லை என்று முன்னாள் முதல்வரும், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அ.தி.மு.க அணிகளின் இணைப்பு தொடர்பாக தில்லிக்கு வரவில்லை: ஓ.பி.எஸ் பேட்டி! 

புதுதில்லி: அ.தி.மு.க வில் உள்ள அணிகளின் இணைப்பு நோக்கத்திற்காக தான் தில்லி வரவில்லை என்று முன்னாள் முதல்வரும், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் இன்று தில்லியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். நிகழ்வுக்கு பின்னர் மாலை ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:-

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரின் வேட்புமனு தாக்கலுக்கு ஆதரவு தரவே நான் தில்லி வந்தேன்.மற்றபடி அதிமுக அணிகள் இணைப்பு பற்றிய நோக்கமில்லை. இரு அணிகள் இணைப்பு தொடர்பான முயற்சிகள் எதுவும் தற்போதைக்கு  தற்போது இல்லை.

பொதுச்செயலாளரை நியமனம் செய்வதற்கு அதிமுக கட்சி அடிப்படை விதிகளில் இடமில்லை.தற்பொழுது வரை பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது. எனவே விரைவில் அதிமுக உட்கட்சித் தேர்தலை நடத்தி பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் ஒரு அரசாக இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்வோம்.

சசிகலா மற்றும் பழனிசாமி அணிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தால் இரு அணியினரும் தேர்தல் ஆணையத்தில் எப்படி ஒரே மாதிரியான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வார்கள்?

இவ்வாறு பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com