கீழடி தொல்பொருள்கள் தமிழகத்திலேயே ஆய்வு: செங்கோட்டையன்

கீழடியில் கிடைத்த தொல்பொருள்களை தமிழகத்திலேயே பாதுகாத்து ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை கூறினார்.
கீழடி தொல்பொருள்கள் தமிழகத்திலேயே ஆய்வு: செங்கோட்டையன்

கீழடியில் கிடைத்த தொல்பொருள்களை தமிழகத்திலேயே பாதுகாத்து ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை கூறினார்.
சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது:
தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தவை என்பதை நிரூபிக்கும் வகையில் கீழடி அகழ்வாய்வுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. அதில் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டு வந்த ஆய்வாளர்கள் திடீரென மாற்றப்படும் நிலையும் தொடர்கிறது. 
கீழடியில் கிடைத்த பழங்காலப் பொருள்களை அண்டை மாநிலத்தில் உள்ள மைசூருக்கு மாற்றும் முயற்சியும் நடக்கிறது. 
தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளை அந்தக் கல்வெட்டுகள், செப்பேடுகள் உலகத்துக்கு எடுத்துக்காட்டக் கூடிய வகையில் அமைந்திருக்கின்றன. எனவே, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, அவற்றை எல்லாம் தமிழகத்திலேயே பேணிப் பாதுகாக்கும் வகையில் எல்லாவித முயற்சிகளையும் அரசு எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியது: கீழடியில் அகழ்வாய்வு மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அதற்காக 72 சென்ட் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. 2 ஏக்கர் நிலம் வேண்டும் என்று கோரியுள்ளனர். அதை வழங்குவதற்குப் பரிசீலித்து வருகிறோம். இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளோம். கீழடியில் கிடைத்த தொல்பொருள்களை தமிழகத்திலேயே பாதுகாத்து ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com