கேளிக்கைக்கு ஜி.எஸ்.டி. வரி: வசூலிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம்

கேளிக்கை மற்றும் வேடிக்கை நிகழ்ச்சிகள் மீது விதிக்கப்படும் சரக்கு -சேவை வரியை (ஜிஎஸ்டி) உள்ளாட்சி அமைப்புகளே வசூலிப்பதற்கான சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியது.

கேளிக்கை மற்றும் வேடிக்கை நிகழ்ச்சிகள் மீது விதிக்கப்படும் சரக்கு -சேவை வரியை (ஜிஎஸ்டி) உள்ளாட்சி அமைப்புகளே வசூலிப்பதற்கான சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியது.
இதற்கான சட்டத் திருத்த மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜூலை மாதத்தில் இருந்து ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வருகிறது. எனவே, அத்தகைய வரி விதிப்பின் கீழ் கேளிக்கைகள் மற்றும் வேடிக்கை நிகழ்ச்சிகள் மீது வரி விதித்து வசூலிப்பதற்கு ஊராட்சிகள், நகராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக புதிய சட்டம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது என சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com