ஜிஎஸ்டியால் நாட்டின் பொருளாதாரம் உயரும்: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

சரக்கு -சேவை வரியின் (ஜிஎஸ்டி) பயனாக, நாட்டின் பொருளாதார விகிதம் உயரும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

சரக்கு -சேவை வரியின் (ஜிஎஸ்டி) பயனாக, நாட்டின் பொருளாதார விகிதம் உயரும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
இந்திய செலவினக் கணக்கீட்டாளர்கள் நிறுவனம் சார்பில், ஜிஎஸ்டி தொடர்பான 100 -ஆவது கருத்தரங்கு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்திய செலவினக் கணக்கீட்டாளர்கள் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சில் தலைவர் வி.முரளி தலைமை வகித்தார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில், ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியது:
"ஒரு நாடு ஒரு வரி' என்ற நோக்கத்தில், ஜிஎஸ்டி ஜூலை 1 -ஆம் தேதி அமல்படுத்தப்பட உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான புதுச்சட்டம் வரும்போது எல்லாருக்கும் அச்சம், தயக்கம் இருக்கத்தான் செய்யும். பின்னர் அது சரியாகிவிடும்.
தொலைநோக்குப் பார்வையில் கொண்டு வரப்படும் சரக்கு - சேவை வரியின் பயனாக, வரி ஜி.டி.பி. (மொத்த உள்நாட்டு உற்பத்தி) தெளிவாக இருக்கும்; நாட்டின் பொருளாதார விகிதம் உயரும். ஜிஎஸ்டி தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் செலவினக் கணக்கீட்டாளர்கள் நிறுவனத்தின் முயற்சி பாராட்டத்தக்கது என்றார் சுரேஷ் பிரபு.
நிகழ்ச்சியில், "ஜிஎஸ்டி அறிமுகம்' என்ற தலைப்பில் ருபேஷ் சர்மாவும், "ஜிஎஸ்டி பொருளாதார முன்னெடுத்தல்' என்ற தலைப்பில் வி.பட்டாபிராமும், "ஜிஎஸ்டி அடிப்படை நடைமுறைகள்' என்ற தலைப்பில் வி.விஜய்பாஸ்கரும், "ஜிஎஸ்டியில் மாற்று கட்டணம்' என்ற தலைப்பில் அபிஷேக் முரளியும் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com