தமிழக அரசு ஒத்துழைத்தால் கன்னியாகுமரி வரை இருவழிப்பாதையை விரைந்து முடிக்க முடியும்: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

தமிழக அரசு ஒத்துழைத்தால் சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையிலான இருவழிப் பாதை பணிகளை விரைந்து முடிக்கலாம் என மத்தியஜ் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
சென்னை சென்ட்ரலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்த ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, தமிழக நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார். உடன், தெற்கு ரயில்வே பொது மேலாளர்
சென்னை சென்ட்ரலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்த ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, தமிழக நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார். உடன், தெற்கு ரயில்வே பொது மேலாளர்

தமிழக அரசு ஒத்துழைத்தால் சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையிலான இருவழிப் பாதை பணிகளை விரைந்து முடிக்கலாம் என மத்தியஜ் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது:
கூடுதல் பாதுகாப்புடன் 40,000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியைவிட தற்போது ரயில்வே துறைக்கு 166 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜக அரசு கடந்த 3 ஆண்டுகளில் ரயில்வே துறை செலவுகளை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அதனை திறம்படக் கையாண்டுள்ளது.
முக்கியமாக மின்சார செலவு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுபோன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்தது ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் மத்திய அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. மேலும், விரைவான, சுகமான பயணத்தைப் பூர்த்தி செய்வதும் ரயில்வேயின் நோக்கமாக உள்ளது.
சென்னையில் இருக்கும் ஐ.சி.எஃப். ரயில் பெட்டி தொழிற்சாலை முழு உத்வேகத்துடன் ஒவ்வொர் ஆண்டும் அதிகப்படியான ரயில் பெட்டிகளைத் தயாரித்து வழங்கி வருகிறது.
மாநில அரசுகள் ஒத்துழைப்பு: மாநில அரசுகளும் ஒத்துழைத்தால்தான் ரயில்வே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும். சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையிலான இருவழிப்பாதை பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தில் தமிழக அரசு ரயில்வேயுடன் இணைந்து பணியாற்றினால் வெகு விரைவாக முடிக்க முடியும்.
மேலும் சென்னை - கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை வழியாக ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டப்பணி அடுத்த 18 மாதங்களில் முடிக்கப்படும். இதனை விரைவாக நிறைவேற்ற தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் சுரேஷ் பிரபு.
தொடக்கி வைத்த புதிய திட்டங்கள்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்த திட்டங்களின் விவரம் வருமாறு:
எண்ணூர்-திருவொற்றியூர் இடையே 7 கிலோ மீட்டர் தொலைவில் 4-ஆவது ரயில் பாதை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 2 மின்தூக்கி இயந்திரம், சென்னை கோட்டத்துக்குட்பட்ட 17 ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகள், மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி மையம், மாற்றுத்திறனாளிகள் தங்கும் அறை.
பல்லாவரம் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட முன்பதிவு அலுவலகம். தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிய உணவகம், சென்னை கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் 5 இடங்களில் குடிநீர் விநியோகம் செய்யும் எந்திரம்.
அரக்கோணம் ரயில் நிலையத்தில் வை-ஃபை வசதி, மேலும் காணொலி காட்சி மூலமாக திருச்சி ரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட உணவகம், மதுரை ரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட உணவகம் மற்றும் குடிநீர் விநியோகம் செய்யும் இயந்திரம் ஆகிய திட்டங்களை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயகுமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெயவர்தன், டி.ஜி.வெங்கடேஷ்பாபு, டி.கே.ரங்கராஜன், பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டா ஜோரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com