தமிழகத்தில் மனை விற்பனைக்கு புதிய விதிகளை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் மனை விற்பனைக்கான புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு கட்டட மனை விற்பனை குழுமத்தின் முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதலுக்கான
தமிழகத்தில் மனை விற்பனைக்கு புதிய விதிகளை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் மனை விற்பனைக்கான புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு கட்டட மனை விற்பனை குழுமத்தின் முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதலுக்கான அலுவலகம் எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையின் மூன்றாவது தளத்தில் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் கட்டட மனை விற்பனை சட்டம் 2016க்கு ஏற்ப மாநில அரசு தமிழ்நாடு கட்டட மனை விற்பனை (முறைப்படுத்துதலும் மற்றும் மேம்படுத்துதலும்) விதிகள் 2017 ஐ உருவாக்கி கடந்த ஜூன் 22 ஆம் தேதி அறிவித்தது. கட்டட மனை விற்பனையை முறைப்படுத்த ஒழுங்குமுறை குழுமம் அமைக்கப்படும். அந்த குழுமத்தின் தலைவர் மற்றும் குழுமம் அல்லது தீர்ப்பாயத்தின் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது அவரது பிரதிநிதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர், சட்டத்துறை செயலர் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு உரிய பரிந்துரைகளை வழங்கும். அதுவரை இடைக்கால ஏற்பாடாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் அரசு செயலாளர் குழுமமாகச் செயல்படுவார்.
புதிய விதிகள்: 500 ச.மீ., நிலப்பரப்பளவு அல்லது 8 அலகுகளுக்கு மேல் உள்ள அனைத்து கட்டட மனை விற்பனையில் ஈடுபடும் முகவர்கள் அத்தகைய திட்டங்களை குழுமத்தில் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும்.
இந்தச் சட்டத்தின் கீழ் விதி மீறியவர்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 10 சதவீத அபராதம் அல்லது 3 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.
குடியிருப்புகள் வகைப்பாடு, மனை விற்பனை விவரம், அனுமதி பெறப்பட்ட விவரங்களைக் குழுமத்தின் இணையதளத்தில் மேம்பாட்டாளரால் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குழுமத்தில் பதிவு செய்யாமல் எந்தவொரு கட்டட மனையையும் விற்பனை செய்ய முடியாது. திட்டத்துக்கான பணிநிறைவு சான்றிதழை உரிய அதிகாரிகளிடமிருந்து கட்டட மேம்பாட்டாளர் கட்டாயமாகப் பெற வேண்டும்
ஐந்து ஆண்டு காலத்துக்குள் கட்டுமானத்திலோ, வேலைப்பாட்டிலோ, தரத்திலோ, சேவையிலோ, ஏதேனும் குறைபாடு காணப்படின் அதை கட்டட மேம்பாட்டாளர் தனது சொந்த செலவில் 30 நாள்களுக்குள் நிவர்த்தி செய்து தர வேண்டும் ஆகியவை முக்கிய கூறுகளாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com