ஆளுநர் மாளிகையில் போலோ போட்டி மான்களின் இனப் பெருக்கத்தைப் பாதிக்கும்: ராமதாஸ்

ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள போலோ விளையாட்டுத் திடலில் போட்டிகள் நடத்தப்பட்டால், மான்களின் இனப் பெருக்கம் பாதிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் தெரவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் போலோ போட்டி மான்களின் இனப் பெருக்கத்தைப் பாதிக்கும்: ராமதாஸ்

ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள போலோ விளையாட்டுத் திடலில் போட்டிகள் நடத்தப்பட்டால், மான்களின் இனப் பெருக்கம் பாதிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் தெரவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் போலோ விளையாட்டுத் திடல் அமைந்துள்ளது. ஆளுநர் மாளிகை பொதுமக்கள் பார்வைக்காக அண்மையில் திறந்துவிடப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக போலோ திடலில் அடிக்கடி போட்டிகளை நடத்தி, அவற்றைப் பார்வையிட பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகையிலிருந்து தமிழக அரசுக்குப் பரிந்துரை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் இந்த போலோ விளையாட்டுத் திடல், அங்கு வாழும் அரிதான புல்வாய் (ஆப்ஹஸ்ரீந் ஆன்ஸ்ரீந்ள்) வகை மான்களின் உணவிடமாகவும், இனப்பெருக்கப் பகுதியாகவும் இருந்து வருகிறது.
இத்திடலில் போலோ போட்டிகளை நடத்தத் தொடங்கினால் புல்வாய் வகை மான்களின் இனப்பெருக்கம் தடைபடக்கூடும். இவை தவிர புள்ளி மான், வெள்ளை மான், கீரி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகளும் பாதிக்கப்படும்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மற்ற மாநகரங்களை விட சென்னைக்கு அதிகமாக உள்ளது. சென்னையின் பசுமைப் போர்வை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சென்னையில் 10,000 ஏக்கர் பரப்பளவிலான தோட்டங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
சென்னையின் பசுமைப் போர்வைக்கு ஆதாரமாகத் திகழ்பவை ஆளுநர் மாளிகையிலிருந்து தொடங்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிதான். பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியை அழித்தது போன்று பாதுகாக்கப்பட்ட வனத்தையும் அரசே அழித்து விடக்கூடாது
எனவே, போலோ திடலைத் திறந்து விடும் திட்டத்தைக் கைவிட்டு, அங்குள்ள வன வளத்தைப் பாதுகாக்கும் வகையிலான திட்டத்தை ஆளுநர் மாளிகை செயல்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com