பான் அட்டை விரைந்து கிடைக்குமா?

நிரந்தர கணக்கு எண் அட்டை அல்லது பான் அட்டை (Permanent Account Number-PAN)  என்பது தனிநபர், தொழில் நிறுவனங்கள், கூட்டு நிறுவங்கள் என பல்வேறுபட்ட வருமான வரி செலுத்துபவர்களுக்காக இந்திய அரசின் வருமான வரி
பான் அட்டை விரைந்து கிடைக்குமா?

நிரந்தர கணக்கு எண் அட்டை அல்லது பான் அட்டை (Permanent Account Number-PAN)  என்பது தனிநபர், தொழில் நிறுவனங்கள், கூட்டு நிறுவங்கள் என பல்வேறுபட்ட வருமான வரி செலுத்துபவர்களுக்காக இந்திய அரசின் வருமான வரித்துறையால் வருமான வரிச் சட்டப்பிரிவு 139 ஏ- இன் கீழ் வழங்கப்படுகிறது. இது ஆங்கில எழுத்து மற்றும் எண்கள் அடங்கிய பத்து இலக்கங்கள் கொண்டது. வங்கி கணக்கு, பங்கு வர்த்தக கணக்கு, வீட்டுக் கடன் கணக்கு, மோட்டர் வாகனம் வாங்க கடன், சொத்துகள் வாங்க என அனைத்து வகையான பயன்பாட்டிற்கும் இந்த பான் அட்டை அவசியம் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் அட்டை பெற விரும்புவோர், வருமான வரித்துறையின் 49-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் அடங்கிய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று இணைக்க வேண்டும். பயனாளிகள் இணையதளம் அல்லது யுடிஐ, என்எஸ்டிஎல் ஆகிய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த ஆண்டு வரை விண்ணப்பித்த 7 முதல் 20 நாள்களுக்குள் பயனாளிகளுக்கு பான் அட்டை வீடு தேடி வந்தது.
தற்போது ரூ. 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கும், புதிதாக வங்கியில் கணக்கு தொடங்குவதற்கும் பான் எண் கட்டாயம் என அரசு அறிவித்துள்ளதை அடுத்து பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும் பயனாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பான் அட்டை கிடைக்க கடந்த சில மாதங்களாக 30 முதல் 60 நாள்களுக்கும் மேலாவதாக விண்ணப்பித்தோர் கூறுகின்றனர். இதனால் வங்கிகளில் தங்கள் கணக்கில் உள்ள பணத்தைக்கூட எடுக்க முடியாமல் பலர் திண்டாடி வருகின்றனர். அடகு வைத்த நகைகளை மீட்பதற்குகூட பான் எண் கோரப்படுவதால் அதை மீட்கவும் முடியாமல் மறுஅடகும் வைக்க முடியாமல் வட்டி ஏறிக் கொண்டு வருவதால் ஏராளமானோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னையில் உள்ள யூடிஐ சேவை மைய அலுவலர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியது: அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் பான் எண் அவசியம் என அரசு அறிவித்ததை அடுத்து பான் அட்டை கேட்டு விண்ணப்பம் செய்வோர் அதிகரித்துள்ளனர். எனினும் இங்குள்ள அலுவலகத்தில் அதை பரிசீலிக்கும் அலுவலர்களின் எண்ணிக்கையோ முன்பு போலவே உள்ளது. இதனால் தாமதமாகிறது என்றனர்.
இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுத்து சில நாள்களில் பான் அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com