ஆந்திரத்துக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட விமானம்!

மாமல்லபுரத்தில் தொடங்க திட்டமிட்டிருந்த தனியார் விமான ஓட்டல் அமைக்கும் பணி கைவிடப்பட்டது. இதையடுத்து விமானம் லாரிகள் மூலம் ஆந்திரத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

மாமல்லபுரத்தில் தொடங்க திட்டமிட்டிருந்த தனியார் விமான ஓட்டல் அமைக்கும் பணி கைவிடப்பட்டது. இதையடுத்து விமானம் லாரிகள் மூலம் ஆந்திரத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

ஆந்திரத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சீனிவாச ரெட்டி. இவர், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மாமல்லபுரத்தில், அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளது போன்று விமானத்தில் நவீன ஓட்டல் அமைக்கத் திட்டமிட்டார்.
இதற்காக சென்னை விமான நிலையத்தில் பழுதடைந்த பயணிகள் விமானத்தை ரூ.50 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கினார். இதையடுத்து மாமல்லபுரத்தில் ஐந்து ரதம் பகுதியில் தனியாரிடம் ஒரு ஏக்கர் நிலத்தை 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தார்.
கடந்த ஆண்டு லாரி மூலம் விமானம் கொண்டு வரப்பட்டு ஐந்து ரதம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு விமான ஓட்டல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
இதற்கிடையில் சீனிவாச ரெட்டி விமானம் வாங்குவதற்காக சென்னையைச் சேர்ந்த குமாரிடம் ரூ.25 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். இதனை திருப்பிக் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
சீனிவாச ரெட்டி மீது மாமல்லபுரம் போலீஸில் குமார் புகார் கொடுத்தார். இதையடுத்து சீனிவாச ரெட்டி விமான ஓட்டல் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து, கடந்த 6 மாதத்துக்கு முன்பு லாரி மூலம் விமானத்தை ஆந்திரத்துக்கு கொண்டு செல்ல முயன்றார்.
இதற்கு குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து கடனை திருப்பி அளித்ததைத் தொடர்ந்து ராட்சத டிரெய்லர் லாரி மூலம் ஞாயிற்றுக்கிழமை ஆந்திரத்துக்கு விமானம் கொண்டுச் செல்லப்படுகிறது. முன்னதாக 60 மீட்டர் நீளமுள்ள இந்த விமானத்தில் இரண்டு ரெக்கைகளும் பிரிக்கப்பட்டு லாரியில் கிரேன் மூலம் விமானம் தூக்கி வைக்கப்பட்டது.
விமானம் தாங்கிய லாரி மாமல்லபுரம் கிழக்கு கட ற்கரை சாலை வழியாக மெதுவாக ஊர்ந்து சென்றது. இந்த விமானம் சென்ற பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மின்கம்பிகள் அகற்றப்பட்டதால் மாமல்லபுரத்தில் 3 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டது.
விமானத்தை ஆந்திரத்துக்கு கொண்டு செல்லும் ராட்சத டிரெய்லர் லாரி .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com