உளுந்தூர்பேட்டை அருகே டெம்போ வாகனம் மீது பேருந்து மோதல்: சாலையில் பெருக்கெடுத்து ஓடிய பால்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பால் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில், டெம்போவில் இருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பால், சாலையில் கொட்டி ஆறாக ஓடிவீணானது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பால் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில், டெம்போவில் இருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பால், சாலையில் கொட்டி ஆறாக ஓடிவீணானது.
உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள தனியார் பால் நிறுவனத்துக்குச் சொந்தமான மினி டெம்போ வாகனம், உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து பால் சேகரித்துக் கொண்டு திங்கள்கிழமை காலை உளுந்தூர்பேட்டை நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த வாகனத்தை வ.சின்னக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயமூர்த்தி(32) ஓட்டி வந்தார்.
டெம்போ வாகனம் உளுந்தூர்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகே வந்தபோது, சென்னையிலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து அதன் மீது மோதியது.
இதில், டெம்போ வாகனம் பலத்த சேதமடைந்தது. அதிலிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பால் தரையில் கொட்டி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த டெம்போ ஓட்டுநர் ஜெயமூர்த்தி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com