கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்: தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை கடந்த 3 நாள்களாகப் பெய்து வருகிறது. சாரலுடன் தொடங்கிய இந்த மழை ஞாயிற்றுக்கிழமை இரவு பலமாக கொட்டத் தொடங்கியது. இரவு 9 மணிக்கு தொடங்கிய பலத்த மழை தொடர்ந்து விடிய விடிய பெய்தது. இதனால் கோட்டாறு, செட்டிக்குளம் சந்திப்பு, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சஜன் சிங் சவன் உத்தரவிட்டுள்ளார்.

கனமழையால் கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடிநீர் பிரச்னை தீர்வதோடு, விவசாயத்துக்கும் உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி, தக்கலை, குலசேகரம், குளச்சல், இரணியல், மண்டைக்காடு, கொட்டாரம், மயிலாடி, சுருளோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குழித்துறையில் 41.8 மிமீ. மழை பெய்துள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளிலும் மழை பெய்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 14.25 அடியாக உள்ளது. அணைக்கு 94 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக உள்ளது.அணைக்கு 42 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com