கரூர் மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு நெசவுத் தொழிற்கூடங்கள் மூடல்

ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, கரூர் மாவட்டத்தில் நெசவு தொழிற்கூடங்கள், நெசவுத் தொழில் தொடர்புடைய நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாட்களுக்கு

ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, கரூர் மாவட்டத்தில் நெசவு தொழிற்கூடங்கள், நெசவுத் தொழில் தொடர்புடைய நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாட்களுக்கு (ஜூன் 27, 28 மற்றும் 29) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதுதொடர்பாக கரூர் நெசவு மற்றும் பனியன் உற்பத்தியாளர்கள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தனபதி கூறியது:
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பால் நூல் கொள்முதல் தொடங்கி முதல் துணிகளை விற்கும் வரையிலான பிளிச்சிங், டையிங், தையல் என அனைத்து நிலைகளிலும் 5 முதல் 18% வரை வரி செலுத்த வேண்டியுள்ளது. மேலும் டையிங் போன்ற ஜாப் ஒர்க்கிற்கு சென்று வரும் நூல், துணிகளுக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்பது கிராமப்புறங்களில் குடிசைத் தொழிலாக ஜாப் ஒர்க் செய்பவர்களால் இயலாத ஒன்று.
செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை (ஜூன் 29) வரை கரூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவு தொழிற்கூடங்கள் இயங்காது. மேலும் ஜவுளித் தொழில் தொடர்புடைய 200 கடைகளும் செயல்படாது. இத்தொழிலில் நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளதால், 3 நாள் கடையடைப்பால் ரூ.15 கோடி வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே, மத்திய அரசு கைத்தறி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளித்தது போல விசைத்தறி தொழிலுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com