காவல் துறைக்கு புதிய டிஜிபியை உடனே நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழக காவல் துறைக்கு தகுதியான புதிய டிஜிபியை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக காவல் துறைக்கு தகுதியான புதிய டிஜிபியை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை :
தமிழக காவல்துறையின் டிஜிபியாக இருந்த அசோக்குமார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக புதிய டிஜிபி நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் உளவுப் பிரிவு தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட டி.கே.ராஜேந்திரனுக்கு, சட்டம் } ஒழுங்கு பிரிவு தலைமை இயக்குநர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. அவரும் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், புதிய டிஜிபி நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், டி.கே. ராஜேந்திரனுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தமிழக காவல் துறையின் செயல்பாடுகளை மிகக் கடுமையாகப் பாதிக்கும்.
தமிழக காவல் துறையில் டிஜிபி நிலையில் உள்ள அதிகாரிகளில் அர்ச்சனா, ஜார்ஜ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடுத்த 3 மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர். மகேந்திரனுக்கு மட்டுமே 2019 }ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பணிக்காலம் உள்ளது. ஆனால், மிகவும் நேர்மையான, திறமையான அதிகாரியான அவரை டிஜிபியாக நியமிக்க ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.
தற்போது கூடுதல் டிஜிபிக்களுக்காக இருக்கும் அதிகாரிகளில் சிலருக்கு அடுத்த ஓரிரு மாதங்களில் பதவி உயர்வு வழங்கி, அவர்களில் ஒருவரை புதிய டிஜிபியாக நியமிக்க ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கு வசதியாகவே இந்தப் பதவி மேலும் 3 மாதங்கள் காலியாக வைக்கப்படுகிறது. தங்களுக்கு விருப்பமானவர்களை நியமிக்க காவல்துறை தலைமை இயக்குநர் பதவி அடிக்கடி காலியாக வைக்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 25 மாதங்கள் காவல்துறை தலைமை இல்லாமல் இருந்துள்ளது. இனியும் இந்த நிலை தொடரக் கூடாது. காவல்துறைக்கு தகுதியும், திறமையும் உள்ள டிஜிபியை உடனே நியமிக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com