மக்கள் ஆதரவுடன் விரைவில் திமுக ஆட்சி

மக்கள் ஆதரவுடன் விரைவில் திமுக ஆட்சி அமைக்கும் என ராணிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி இலக்கியாவுக்கு பரிசு வழங்கிய மு.க.ஸ்டாலின்.
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி இலக்கியாவுக்கு பரிசு வழங்கிய மு.க.ஸ்டாலின்.

மக்கள் ஆதரவுடன் விரைவில் திமுக ஆட்சி அமைக்கும் என ராணிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

வேலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் 94}ஆவது பிறந்த நாள் விழா, நல உதவிகள் வழங்கும் விழா, பொதுக்கூட்டம் ஆகிய முப்பெரும் விழா ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், ராணிப்பேட்டை எம்எல்ஏவுமான ஆர்.கந்தி தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் அ.அசோகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ.கே.சுந்தரமூர்த்தி, என்.ராஜ்குமார், வசந்தி ரவி, பொருளாளர் மு.கண்ணையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் வரவேற்றார்.
விழாவில், திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 500}க்கும் மேற்பட்டோருக்கு நல உதவிகளை வழங்கி பேசியதாவது:
இந்தப் பொதுக்கூட்ட மேடை முன் திரண்டுள்ள மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது, இது திமுக கட்சி விழாவா? அல்லது ஆளும் கட்சி நடத்தும் அரசு விழாவா? என எண்ணத் தோன்றுகிறது. எனென்றால் திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியை செய்து கொண்டே இருக்கும்.
இந்த விழாவில் பெண்கள் சுயமாக தொழில் செய்ய மாவு அரைக்கும் இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள், மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஊக்கத் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள், திமுகவுக்காக பாடுபட்டு வறுமை நிலையில் உள்ள கட்சியினருக்கு உதவித் தொகை என 500}க்கும் மேற்பட்டோர் இந்த நல உதவிகள் மூலம் பயனடைந்துள்ளனர். இந்த சிறப்பான பணியை செய்து முடித்துள்ள மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தியை பாராட்டுகிறேன்.
மக்கள் ஆதரவுடன் விரைவில் திமுக ஆட்சி அமைக்கும். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக் கொண்டுவர விசாரணை ஆணையம் அமைக்கப்படும். தற்போது மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சியில் நீர்நிலைகள் தூர்வரப்படவில்லை. அதனால் தான், திமுக அப்பணியை செய்து வருகிறது. தமிழக்ததில் கடந்த 6 மாதங்களில் இதுவரை 89 நீர்நிலைகளை தூர்வாரியுள்ளோம் என்றார்.
தொடர்ந்து, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் பேசினர்.
விழாவில், மத்திய, மாவட்டச் செயலாளர் நந்தகுமார், மாநகரச் செயலாளர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மத்திய, மாவட்ட அவைத் தலைவர் முகமது சகி, மேற்கு மாவட்டச் செயலாளர் முத்தமிழ்ச்செல்வி, எம்எல்ஏ நல்லத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நகரச் செயலாளர் டி.பிரகாஷ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com