மீன்கள் வரத்தால் கறிக்கோழி விலை சரிவு

தடைகாலம் முடிந்து மீன் வரத்து அதிகரித்துள்ளதால், கறிக்கோழி விலை கடந்த நான்கு நாள்களில் கிலோவுக்கு ரூ. 16 வரை சரிந்துள்ளது.
மீன்கள் வரத்தால் கறிக்கோழி விலை சரிவு

தடைகாலம் முடிந்து மீன் வரத்து அதிகரித்துள்ளதால், கறிக்கோழி விலை கடந்த நான்கு நாள்களில் கிலோவுக்கு ரூ. 16 வரை சரிந்துள்ளது.

தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 25,000 கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு (பிசிசி) தினமும் நிர்ணயம் செய்கிறது. கடந்த ஒரு மாதமாக கறிக்கோழி விலை கிலை ரூ. 100}க்கு குறையாமல் இருந்தது. வெயில் கடுமையாக இருந்ததால் நுகர்வு குறைந்தபோதிலும், ஆழ்கடலில் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்ததால் கறிக்கோழி விலை குறையவில்லை. இந்த நிலையில், கடந்த நான்கு நாள்களில் கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ. 16 வரை சரிந்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வங்கிலி சுப்ரமணியம் கூறியது:
மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்ததால் கடந்த ஒன்றரை மாத காலமாக கறிக்கோழி விலை குறையாமல் இருந்தது. இந்த நிலையில், மீன்பிடி தடைகாலம் முடிந்து தற்போது மீன்கள் வரத்து துவங்கி உள்ளது. அதனால் கறிக்கோழி நுகர்வு குறைந்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com