1,577 கால்நடை உதவியாளர் பணிக்கான தேர்வு ரத்து

கால்நடை உதவியாளர் பணிக்கான தேர்வு நடைமுறையில் தவறு நடைபெற்றுள்ளதால் தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்
1,577 கால்நடை உதவியாளர் பணிக்கான தேர்வு ரத்து

கால்நடை உதவியாளர் பணிக்கான தேர்வு நடைமுறையில் தவறு நடைபெற்றுள்ளதால் தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் விஜயபுரத்தை சேர்ந்த கிருத்திகா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் 1,577 கால்நடை உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநரால் கடந்த ஏப்ரல் 19 -ம் தேதி முதல் வரவேற்கப்பட்டது.

மேலும், இந்த பணிக்கான நேர்முகத்தேர்வு கடந்த
மே 10 -ம் தேதி நடத்தப்பட்டது. அந்த நேர்முக தேர்வில் நானும் கலந்துகொண்டேன். ஆனால் இதுவரை முடிவு அறிவிக்கப்படவில்லை.

மேலும், இந்த பணிக்கு ரூ. 6 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை அமைச்சரில் இருந்து அதிகாரிகள் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு நியமனம் வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, நியாயமாக முடிவுகள் வெளியிட உத்தரவிட வேண்டும். ஐஏஎஸ் அதிகாரி சகாயம் போன்றோரை நியமித்து நேர்மையாக இந்த தேர்வை நடத்த வேண்டும் எனஅந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஆர்.முத்துக்குமாரசாமி ஆஜராகி, ""கால்நடை உதவியாளர்களுக்கான நியமனம் மாவட்ட அளவில் சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், தற்போது மாநில அளவில் தவறுதலாக இந்த நியமனம் நடைபெறவிருந்தது. எனவே, தேர்வு நடைமுறையில் தவறு நடந்துள்ளதால் தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து கால்நடை துறைச் செயலாளர் அறிவித்துள்ளார்.

மேலும் புதிதாக தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com