சந்தேகமேயில்லை, தமிழகத்தின் மிகச் சிறந்த நாள் நேற்று

தென்மேற்குப் பருவ மழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்திருக்கும் நிலையில், தமிழகத்துக்கு சந்தேகமேயில்லாமல் நேற்று மிகச் சிறந்த நாள் என்று சொல்லலாம்.
சந்தேகமேயில்லை, தமிழகத்தின் மிகச் சிறந்த நாள் நேற்று


சென்னை: தென்மேற்குப் பருவ மழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்திருக்கும் நிலையில், தமிழகத்துக்கு சந்தேகமேயில்லாமல் நேற்று மிகச் சிறந்த நாள் என்று சொல்லலாம்.

தமிழகத்தில் கோவை, நெல்லை, கன்னியாகுமரி என பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்திருப்பதால், முக்கியப் பல அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடுமையான வெப்பம், வறண்ட பூமி, வாடிய பயிர்கள் என ஒட்டுமொத்த தமிழகமே வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து வந்த நிலையில், தென்மேற்குப் பருவ மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் கூறியிருப்பதாவது, தமிழகத்துக்கு தென்மேற்குப் பருவ மழைக் காலத்தின் மிகச் சிறப்பானதொரு நாள் நேற்று என்பதில் சந்தேகமேயில்லை. அனைத்து முக்கிய அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் மேற்குப் பகுதிகளில் பெய்த மழை அளவு மற்றும் அணைகளின் நீர்வரத்து குறித்து தகவல்களை கீழே காணலாம்.

கோவை மாவட்டத்தில் மழை நிலவரம்

வால்பாறை - 174 மி.மீ.
சின்னக்கல்லாறு - 142 மி.மீ.
சிறுவாணி - 105 மி.மீ.
பரம்பிக்குளம் - 97 மி.மீ.
சோலையாறு அணை - 70 மி.மீ.
வால்பாறை தாலுகா அலுவலகம் - 62 மி.மீ.
பொள்ளாச்சி - 30 மி.மீ.

பரம்பிக்குளம் அணைக்கு 1,656 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சோலையாறு அணைக்கு 2,983 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது 17 சதவீதமாக அணையின் நீர்மட்டம் உள்ளது. ஆழியாறு அணையின் நீர்மட்டம் 23 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், 
மேல் பவானி - 143 மி.மீ.
நடுவட்டம் - 62 மி.மீ.

பில்லூர் அணைக்கு 1,657 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. முற்றிலும் வறண்டு போயிருந்த பவானி சாகர் அணையில் தற்போது 5 சதவீத நீர் நிரம்பியுள்ளது.

திருநெல்வேலி
அடவிநயினார் - 62 மி.மீ.
பாபநாசம் அணை - 52 மி.மீ.
தென்காசி - 38 மி.மீ.
செங்கோட்டை - 29 மி.மீ.
பாபநாசம் அணைக்கு 2,167 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வளவாக மழை இல்லாததால், அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது.
பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்திருப்பதால் சேர்வலாறு அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தேனி மழை அளவு
பெரியார்  - 72மி.மீ.
தேக்கடி - 52 மி.மீ.

முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து 1932 கன அடியாக உயர்ந்துள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை. அணை நீர் மட்டமும் அப்படியே உள்ளது.

கன்னியாகுமரியில் மழையும், அணைகளின் நிலவரமும்
கிள்ளியூர் - 65 மி.மீ.
குழித்துறை - 40 மி.மீ.
பேச்சிப்பாறை - 35 மி.மீ.
கன்னியாகுமரி - 27 மி.மீ.
பெருஞ்சாணி - 27 மி.மீ.
பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து 429 கன அடியாக அதிகரித்து நீர்மட்டம் 20 சதவீதமாக உள்ளது. பெருஞ்சாணி அணைக்கு நீர்வரத்து 353 கன அடியாக உயர்ந்து 9 சதவீதமாக நீர்மட்டம் உள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை
கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் மழை பெய்திருப்பதும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்திருப்பதாலும் கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், குடகு மாவட்டத்திலும் தொடர்ந்து 2வது நாளாக 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com