தமிழக சட்டப் பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப் பேரவை புதன்கிழமை கூடுகிறது.

மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப் பேரவை புதன்கிழமை கூடுகிறது.

காலை 10 மணிக்குப் பேரவை கூடியதும், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இந்தத் துறைகளின் மீதான விவாதங்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
முக்கியப் பிரச்னைகள்: தனியார் பாலில் கலப்படம் தொடர்பாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறி வருகிறார். தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சருக்கே மிரட்டல் என்ற பிரச்னையை திமுக உறுப்பினர்கள் புதன்கிழமை எழுப்புவார்கள் எனத் தெரிகிறது. வறட்சி தொடர்பாகவும், விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்தும் அவர்கள் விவாதிக்கக் கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com