பி.இ., பி.டெக்., நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை: காரைக்குடியில் ஜூன் 30-இல் கலந்தாய்வு தொடக்கம்

டிப்ளமோ முடித்தவர்களுக்கு பி.இ., பி.டெக்., படிப்பு களுக்கு நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கான கலந்தாய்வு காரைக்குடியில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூலை 10 வரை நடைபெறுகிறது.

டிப்ளமோ முடித்தவர்களுக்கு பி.இ., பி.டெக்., படிப்பு களுக்கு நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கான கலந்தாய்வு காரைக்குடியில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூலை 10 வரை நடைபெறுகிறது.

காரைக்குடி அழகப்பச்செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி முதல்வரும், கலந்தாய்வுச் செயலாளருமான ஏ. இளங்கோ செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2017-2018 ஆம் ஆண்டுக்கு தமிழகத்தில் உள்ள 532 பொறியியல் கல்லூரிகளில் உள்ள நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீடு செய்துள்ள 94,518 இடங்களுக்கு 17.5.2017 முதல் 19.6.2017 வரை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறபட்டன. இதில் ஆண்கள் 11,588-ம், பெண்கள் 1,481-ம் என 13,069 பேர் விண்ணப்பித் துள்ளனர்.
கடந்த 14 ஆண்டுகளாக காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூ ரியில் பி.இ., பி.டெக்., நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் வரும் ஜூன் 30-ந்தேதி கலந்தாய்வு தொடங்கி ஜூலை 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.
முதல் நாளில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு நடைபெறும். விளையாட்டு வீரர்கள், முன்னாள் ரா'ணுவத்தினரின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு ஜூன் 30 -ந்தேதி காலை 9.30 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும். மேலும் லெதர் மற்றும் பிரிண்டிங் டெக்னாலஜி படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும். ஜூலை 1-ந்தேதி காலையில் கெமிக்கல், டெக்ஸ்டைல் பாடப்பிரிவுகளுக்கும் மதியம் முதல் ஜூலை 3-ந்தேதி வரை சிவில் பாடப்பிரிவுகளுக்கும், ஜூலை 3 காலை முதல் ஜூலை 7 மதியம் வரை மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூலை 7 மதியம் முதல் ஜூலை 10-மாலை 3 மணி வரை எலெக்ட்ரிக்கல் பாடப் பிரிவுகளுக்கும், ஜூலை 10 மாலையில் பி.எஸ்சி., பட்டம் முடித்தவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற்று நிறைவடைகிறது.
கலந்தாய்வுக்குரிய கடிதம் கல்லூரியின் www.accetlea.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04565-224535, 230801 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். கலந்தாய்வுக்கு வருவதற்கு காரைக்குடி பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
பேட்டியின் போது கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கணேசன் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com