புதுச்சேரி சென்டாக் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பரிந்துரை எதிரொலியாக புதுச்சேரி சென்டாக் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சிபிஐ அதிகாரிகள் குழு அதிரடி சோதனை மேற்கொண்டது.

துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பரிந்துரை எதிரொலியாக புதுச்சேரி சென்டாக் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சிபிஐ அதிகாரிகள் குழு அதிரடி சோதனை மேற்கொண்டது.
புதுச்சேரியில் மருத்துவ, பொறியியல் பாடப் பிரிவுகளுக்கான இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளாக எம்பிபிஎஸ், மருத்துவ பட்டமேற்படிப்பு பாடப் பிரிவுகள் சேர்க்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பெருந்தொகை ஊழல், முறைகேடு நடைபெற்ôக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த மே 30}ஆம் தேதி ஆளுநர் கிரண்பேடி சென்டாக் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டார். கலந்தாய்வின்போது 71 அரசு ஒதுக்கீட்டு இடங்களை மறைத்துள்ளதை கண்டுபிடித்தார். பின்னர் அவற்றுக்கு மறு கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், தனியார் கல்லூரி நிர்வாகங்கள் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கிரண்பேடி தெரிவித்திருந்தார். சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மாணவர் சேர்க்கையில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக அவசரமாக விசாரிக்கவும், இதுதொடர்பான ஆதாரங்கள், ஆவணங்களை அழிக்கவிடாமலும், அவற்றை பாதுகாக்கவும் விசாரணையை தொடங்க வேண்டும்.
இதுதொடர்பான சில முக்கிய ஆவணங்கள் சிபிஐக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கையில் முறைகேடு புகார்கள் எதிரொலியாக புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், சென்டாக் செயல்பாடுகள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் செயலகம் பரிந்துரைத்தது.
அதன் எதிரொலியாக சென்னையில் இருந்து 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு சென்டாக் அலுவலகத்துக்கு வந்தது. அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். இரவு 7.10 மணி வரை சோதனை நீடித்தது. பின்னர், 2 பெட்டிகள் முழுவதும் முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் தங்கள் வசம் கொண்டு சென்றனர்.
இதற்கிடையே, ஆளுநர் கிரண்பேடி தனது கட்டுரைப் பதிவில் (டுவிட்டர்) கூறியுள்ளதாவது: சென்டாக் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக புகார்தாரர்கள் எனக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆளுநர் செயலகம் பரிந்துரைத்ததால் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். அரசு அதிகாரிகளுடன் இணைந்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் மேற்கொண்ட முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
மேலும், மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் முறையாக நடந்ததாத சென்டாக் அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தும்படி மத்திய கண்காணிப்பு ஆணையத்துக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின் குற்றம் வெளிவரும். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக பொதுநல வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது. புதுச்சேரி மாணவர்களுக்கான இடங்கள் அவர்களுக்கே கிடைப்பதை உறுதி செய்யும். நீதியும், உண்மையும் நிலை நாட்டப்பட வேண்டு என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com