9 மாவட்டங்களில் 11 புதிய பாலங்கள்

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் புதிதாக 11 பாலங்கள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
9 மாவட்டங்களில் 11 புதிய பாலங்கள்

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் புதிதாக 11 பாலங்கள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

சட்டப் பேரவையில் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள்-சிறுதுறைமுகங்கள் துறைகளின் மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
திருவள்ளூர், வேலூர், கோவை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ஏழு மாவட்டங்களில் 9 ரயில்வே மேம்பாலங்கள், கீழ் பாலங்களும், மதுரை, கோவை மாவட்டங்களில் 2 ரயில்வே மேம்பாலங்களும் ரூ.529.39 கோடியில் கட்டப்படும்.
ஈரோடு-பெருந்துறை-காங்கேயம் சாலையில் காளிங்கராயன் இல்லத்தில் இருந்து திண்டல்மேடு வரை ரூ.300 கோடியில் உயர்நிலை பாலம் அமைக்கப்படும். மேலும், கோவை காரமடை நகருக்கு கிழக்குப் பகுதி, அன்னூர் நகருக்கு புறவழிச்சாலைகள் ஆகியன ரூ.185 கோடியில் அமைக்கப்படும்.
ஆற்றின் குறுக்கே பாலங்கள்: தஞ்சாவூர் மாவட்டம் கணபதி அக்ரஹாரம் சாலையில் புதிய உயர் நிலை பாலம், நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம்-ஈரோடு கொடுமுடி இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே உயர்நிலை பாலம், மதுரை கௌண்டாறு நதியின் குறுக்கே ஆலம்பட்டியில் உயர்நிலை பாலம், குண்டாறு நதியின் குறுக்கே திருமங்கலத்தில் உயர்நிலைப் பாலம், விழுப்புரம் மாவட்டம் மணியாறு, மலட்டாற்றின் குறுக்கே இரண்டு உயர்நிலைப் பாலங்கள் ஆகிய 8 பாலங்கள் ரூ.145.68 கோடி மதிப்பில் கட்டப்படும்.
திரும்ப கட்டுதல்: காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், சேலம், அரியலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11 பாலங்கள் புதிய உயர்நிலைப் பாலங்களாக ரூ.130.43 கோடியில் கட்டப்படும்.
பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம், துறையூர், திருவள்ளூர் ஆகிய நகரங்களுக்கு புறவழிச்சாலை அமைக்க நில எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் இருந்து கோவை மாநகருக்கு செட்டிப்பாளையம் வழியாக மாற்றுப் பாதை அமைக்க நில எடுப்புப் பணிகள் நிகழாண்டில் நடைபெறும்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வடபாளை வராக நதியின் குறுக்கே உள்ள தரைப்பாலத்துக்கு பதிலாக உயர்நிலை பாலம் கட்டப்படும். நபார்டு வங்கி உதவியுடன் 152 ஆற்றுப் பாலங்கள் ரூ.400 கோடியில் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com