எம்.ஜி.ஆருக்கு நினைவு வளைவு: பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நூற்றாண்டு விழாவை ஒட்டி, எம்.ஜி.ஆருக்கு நினைவு வளைவு அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

நூற்றாண்டு விழாவை ஒட்டி, எம்.ஜி.ஆருக்கு நினைவு வளைவு அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

சட்டப் பேரவையில் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள்-சிறுதுறைமுகங்கள் துறைகளின் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதங்களுக்கு புதன்கிழமை பதிலளித்து அவர் பேசியது:-
முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னையில் அவரது நினைவாக நூற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படும்.
ஜெயலலிதாவுக்கு....: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பிரம்மாண்ட நினைவு மண்டபம் அமைக்க உலகளாவிய கட்டட கலைஞர்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து வரைபடங்கள் பெறுவதற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் பாராட்டும் வகையில் நிபுணர்கள் குழு மூலம் சிறந்த வரைபடங்களைத் தேர்வு செய்து நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளது என்றார் முதல்வர் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com