சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆறு கூடுதல் நீதிபதிகள் புதன்கிழமை பதவியேற்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றற நீதிபதிகளாக பதவியேற்றற (இடமிருந்து) தெய்வசிகாமணி, எம்.தண்டபாணி, அப்துல் குத்தூஸ், ஜி.ஆர்.சுவாமிநாதன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, வி.பவானி சுப்புராயனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார
சென்னை உயர்நீதிமன்றற நீதிபதிகளாக பதவியேற்றற (இடமிருந்து) தெய்வசிகாமணி, எம்.தண்டபாணி, அப்துல் குத்தூஸ், ஜி.ஆர்.சுவாமிநாதன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, வி.பவானி சுப்புராயனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆறு கூடுதல் நீதிபதிகள் புதன்கிழமை பதவியேற்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
வழக்குரைஞர்கள் வி. பவானி சுப்பராயன், ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா , ஜி.ஆர். சுவாமிநாதன், அப்துல் குத்தூஸ், எம்.தண்டபாணி, புதுச்சேரி தெய்வசிகாமணி ஆதிகேசவலு ஆகிய ஆறு பேரை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து, கடந்த வாரம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்தார்.
இவர்கள், ஆறு பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில், உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துகுமாரசாமி, அரசு வழக்குரைஞர்கள், வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
வி. பவானி சுப்பராயன்: தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த 1962 }ஆம் ஆண்டு பிறந்த இவர், சென்னை சட்ட கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, 1986}ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தார். பின்னர், 2006 மற்றும் 2008 }ஆம் ஆண்டுகளில் கூடுதல் அரசு வழக்குரைஞர், அரசு சிறப்பு வழக்குரைஞராகவும் பணிபுரிந்தார்.
ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா: தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 1966}ஆம் ஆண்டு பிறந்த இவர், 1989}ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தார். பின்னர், தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் ஜி.ஆர்.எட்மண்டிடமும்; பெப்பின் பெர்னான்டோவிடமும் ஜூனியராக பயிற்சி பெற்றார். கடந்த 2010}ஆம் ஆண்டு அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞராகப் பணிபுரிந்துள்ளார். கட்டப் பஞ்சாயத்தை ஒடுக்குவதற்காக இவர் அளித்த பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜி.ஆர்.சுவாமி நாதன்: கடந்த 1968}ஆம் ஆண்டு பிறந்து, 1991}ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தார். கடந்த 2004ஆம் ஆண்டு மதுரையில் சென்னை உயர் நீதிமன்றக் கிளை தொடங்கப்பட்ட போது அங்கு தனது வழக்குரைஞர் தொழிலை மாற்றிக்கொண்டார். பின்னர் மத்திய அரசு உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டு அந்தப் பொறுப்பை வகித்து வந்தார்.
அப்துல் குத்தூஸ் : தேனி மாவட்டத்தில், கடந்த 1969}ஆம் ஆண்டு பிறந்த இவர் 1993}ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தார். இவரது குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை வழக்குரைஞர் ஆவார். இவரது தந்தை ஏ.அப்துல் ஹாதியும், உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர் . இவரது தாத்தா எஸ்.கே.அஹமத் மீரான் சுதந்திர போராட்ட தியாகி .
எம்.தண்டபானி: கடந்த 1968}ஆம் ஆண்டு பிறந்த இவர், 1991}ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தார். கடந்த 2000}ஆம் ஆண்டு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டு, 2001}ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர். கடந்த 2016}ஆம் ஆண்டு அமலாக்கதுறையின் சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார்.
பி.டி.ஆதிகேசவலு : கடந்த 1970}ஆம் ஆண்டு பிறந்த இவர், 1994}ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தார். கடந்த 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலும் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துக்குமாரசாமிக்கு பல்வேறு வழக்குகளில் உதவி புரிந்துவருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com